தந்தை அதிகாரம்

18 வருடங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தையை பார்ப்பதற்காய் அந்த குழந்தையின் உறவினர்களெல்லாம் வந்திருந்தார்கள்.
ஆனால் அந்த குழந்தையின் தந்தை மட்டும் வரவில்லை.
எல்லா வாய்களும் பேசுகின்றன பொன்னு பொறந்துட்டா அதனால தான் பாக்க வரலனு.
அடுத்த நாள் அந்த தந்தை மழையிலே உழவோட்டிக் கொண்டிருக்கிறார்.
போய்‌ குழந்தையை பாத்துட்டு வா பா பொன்டாட்டி பொக்குனு போயிருவா பின்னாடி புள்ள ஏங்கி போய்டும் னு சொன்னதுக்கு அந்த அப்பா சொல்கிறார்.
ஒரு விவசாயிக்கு தன்னுடைய குடும்பம்‌ குழந்தை சொந்தம் பந்தம் இவையெல்லாம் எவ்வளவு முக்கியமோ அதைவிட அவனுக்கு சோறு போடுற நிலம் முக்கியம்ங்க.
மண்ண நேசிக்கிற நான் என் பொண்ண நேசிக்காம போய்ருவேனா.
விதைக்கிற நேரத்துல விதைச்சா தான விளைஞ்ச என் பயிர (குழந்தைய) சந்தோசமா பாத்துக்க முடியும் என்று கூறிய அந்த தந்தை உண்மையிலே போற்றுதலுக்குரியவர் தான்.
தந்தை அதிகாரம் தொடரும்....

Comments

  1. Semma ah iruku... Migavum arumaiyana pathivu...

    ReplyDelete
  2. பேச்சாளர் காவியா சரவணன் அவர்களை தமிழ் வலையுலகம் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.
    தந்தை அதிகாரம் என்ற தலைப்பிலான தங்கள் முதல் பதிவு, எழுத்துலகில் தங்களுக்கு இன்னொரு முகத்தை வெளிப்படுத்துவதாக அமையட்டும்.
    வாழ்க! வளர்க!

    ReplyDelete
  3. தங்களை அன்புடன் வலையுலகிற்கு வரவேற்கிறேன் காவியா.. தொடருங்கள் தொடர்கிறேன்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எழுத்தாணி பிடித்து இலக்கியத்தை நிமிர்த்திய பெண்கள்

கிராமம் அது சொர்க்கம்...