Posts

Showing posts from August, 2018

உளறல்களுக்கு பேச்சு வடிவம் கிடைத்த மேடை

Image
எங்க அம்மாவுக்கும் எனக்கும் உள்ள உறவு தொப்புள்கொடி உறவு திருப்பூர் குமரனுக்கும் இந்த தேசத்துக்கும் உள்ள உறவு தேசியக்கொடி உறவு. கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவு தாலிக்கொடி உறவு. இந்த மாதிரி எந்த ஒரு இணைப்பும் இல்லாமல் நண்பர்களிடையே மலர்ந்து மணம் வீசுகின்ற உறவு தான் நட்பு எனும் நேசக்கொடி உறவு. இந்த வரிகளை என் வாழ்வில் எந்நாளும் மறக்க மாட்டேன் . ஏனென்றால் முதன்முதலாய் தொலைக்காட்சி கேமாராவைப் பார்க்கிறேன். சந்தித்திராத கூட்டத்தை சந்திக்கிறேன். பெற்றோரை நீங்கள் பேசுவதைப் பார்க்க அழைத்து வாருங்கள் என்று சொல்லி கொடுக்கப்பட்ட சீட்டு இரண்டு கைப்பையிலே கண்ணுறங்குகிறது. எட்டாம் வகுப்பு பாப்பா என்ன பேசப் போகுது என பார்க்கும் பெருங்கூட்டம். பேச்சாளர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் ஒருஙங்கிணைப்பாளர் வாசிக்க என் பெயரை மட்டும் காணவில்லை. அழுகை கலந்த பயம். எல்லா பெயரும் சொல்லி முடித்த பிறகு மேடையில் இருக்கின்ற பேச்சாளர்களின் பெயரையெல்லாம் சொல்லிவிட்டேன். இந்த மேடையில் ஒரு  கத்தி அமர்ந்திக்கிறது என்று சொல்லி என்னை அறிமுகம் செய்தார். இப்படியெல்லாம் சொல்லுகிறாரே திக்காமல் ஒழுங்காக பே

அகத்தாய்வு செய்வோம்...

Image
நேற்று ஒரு ஆங்கில புத்தகம் ( யூ வில் வின் ) படிக்கும் போது ஒரு கதை படித்தேன் அதிலிருந்து நான் என்ன கற்றுக் கொண்டேன என்பது குறித்த பதிவே இது... ஒரு பலூன் வியாபாரி அழகழகான பலூன்களை விற்றுக் கொண்டிருக்கிறார். அவருடைய வியாபாரம் தொய்வு ஏற்படும் போதெல்லாம் அந்த பலூன்களில் ஹுலியம் வாயுவை நிரப்பி பறக்க விடுவார். அது பறக்கிறதைப் பார்த்து நிறைய பேர் அதை வாங்கிக் கொள்ள ஓடி வருவார்கள். பச்சை நீலம் ஊதா சிவப்பு ஆரஞ்சு என பல நிறங்களில் அந்த பலூன் இருக்கும். ஒரு சமயம் ஒரு சிறுவன் அந்த பலூன் வியாபாரியிடம் நின்று கொண்டு " கருப்பு நிற பலூனைப் பறக்க விட்டால் அதுவும் பறக்குமா " என்று கேட்டான். அதற்கு அந்த பலூன் வியாபாரி வெளியே இருக்கின்ற நிறத்தால் அந்த பலூன் பறக்கவில்லை அதற்கு உள்ளே இருக்கின்ற ஒரு வாயுவால் தான் அது பறக்கிறது என்று கூறினார். ஆம். நமக்குள்ளே ஆயிரமாயிரம் ஆற்றல்கள் கொட்டி கிடக்கின்றன். அகத்தாய்வு செய்யாமல் புறத்தாய்வு மட்டும் செய்து கொண்டிருக்கிறோம். வெளித் தோற்றம் சில வருடங்களுக்குப் பிறகு இல்லாமல் போய்விடும். ஆனால் நம்முடைய அகத்தில் இருக்கின்ற பண்புகள் நாம் இந்த மண

மனமே மாறிவிடு

Image
ஒரு சில ரகசியங்களை நாம் நமக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்வோம். சில சமயங்கள் அந்த ரகசியங்களெல்லாம் வேறு யாருக்காவது தெரிந்து விட்டது என்றால் கோபம் கொள்வோம். அது நியாயமா??? ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். நம்முடைய ரகசியங்களை நம்மாலேயே பாதுகாக்க முடியவில்லை அதனால் தான் பகிர்ந்து கொள்கிறோம். நம்மால் பாதுகாக்க முடியாத நம்முடைய ரகசியங்களை மற்றவர்கள் பாதுகாப்பார்கள் என நம்புவது எப்படி நியாயம்.......????

எழுத்தாணி பிடித்து இலக்கியத்தை நிமிர்த்திய பெண்கள்

Image
சென்ற ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றதற்காக கல்லூரியின் தாளாளரிடம் வாழ்த்துப் பெற சென்றிருந்தேன். அந்த சமயத்தில் எங்கள் தமிழ்த் துறைத் தலைவர் குணசீலன் ஐயாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஐயா என்ன தலைப்பு குடுத்தாங்க எந்த கருத்த மூலமா வைச்சு பேசுனீங்க என்று கேட்டார். நான் ‌"ஔவைப் பாட்டியின பாட்டே பண்பாடு" எனும் தலைப்பில் அவரின் பாடல் வரிகளை சொல்லி நிகழ்கால உதாரணத்தை சொல்லி பேசினேன் ஐயா என்று சொன்னேன். ஐயா : எந்த ஔவையாரைப் பற்றி பேசினீர்கள்? நான் : எந்த ஔவையாரா! எனக்கு தெரிந்தது ஒரே ஒரு ஔவையார் தான் ஐயா. ஐயா : இல்லை பா. இலக்கியத்தையும் வரலாற்றையும் நன்றாக படித்து பாருங்கள். நான்கு ஔவையார் இருக்கிறார்கள்... நீண்ட நாட்கள் கழித்து நினைவுகளை அசை போடும் போது தான் ஒரு கருத்து தோன்றியது. ஆரம்ப பள்ளியில் ஆரம்ப பாடமாக ஆத்திச்சூடி தந்திருக்கிறார்கள்.அதை எழுதியவர் குறித்த முழுமையான பார்வையும் புரிதலுமே நமக்கு இல்லையே. இன்னும் எத்தனையோ தகவல்கள் நம்மை சுற்றியும் இருக்கின்றன. அதைத் தேடி கண்டுபிடிக்க வேண்டியது

நட்பு அன்றும் இன்றும்

Image
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. என்கிறார் வான்மறை தந்த வள்ளுவர். உண்மையான நட்பு என்பது தனது நன்பனுக்கு ஆபத்து வருகின்ற தக்க காலத்தில் உதவுவதாக இருக்க வேண்டும். புறநானூறிலே "தன் தோழற்கு வருமே" எனும் ஒரு பாடலில் ஒரூஉத்தனார் நட்பை அழகாய் ஆழமாய் கூறியிருக்கிறார். அந்த பாடல் வரிகள். கோட்டம் கண்ணியும் கொடுந்திரை அடையும்- வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்- ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய- திணிநிலை அலறக் கூவை போழ்ந்து தன்- வடிமான் எகம் கடிமுகத்து ஏந்தி- ஓம்புமின் ஓம்புமின் இவண்! என ஓம்பாது- தொடர்கோள் யானையின் குடர்கால் தட்பக்- கன்றுஅமர் கறவை மான; முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே. இந்த பாடலின் பொருள் எனது பார்வையில். அழகான கண்ணியும்  மென்மையான ஆடையும் மன்னனின் பெருமையைப் பாடிப்பாடி அவனை கவருதலும் அவனுக்கு ஏற்புடையது அல்ல. போரிலே தன்னுடைய நண்பன் பகைவர்களால் சூழப்பட்டிருக்கும் சமயத்திலே போர்வாளினை ஏந்திக் கொண்டு முன்னே நண்பனை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிற பகைவர்களையெல்லும் அழித்துக் கொண்டே இவன் முன்னோக்கி செல்கின்றான். சுற்றி நிற்

அன்புள்ள அப்பா

Image
சமீபத்தில் என் அப்பாவிடம் ஏன் அப்பா இவ்ளோ கஷ்டப்பட்டும் என்ன படிக்க வைக்குறீங்க என்று கேட்டேன். அதற்கு அவர் நான் தான் வானத்த அன்னாந்து பாத்து பாத்்து விவசாயம் செஞ்சு செஞ்சு ஏமாந்து போய்டேன். ஆனா நான் பெத்த புள்ளையும் பையனும் மத்தவங்க அன்னாந்து பாக்குற அளவுக்கு உயரனும். அதா சாமி படிக்க வைக்குறேன் என்று சொன்னார். இது பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்தது. அப்துல் கலாம் ஐயாவின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற பட்டிமன்றத்தில் இந்த கருத்தை பதிவு செய்தேன். இதை இன்று என் அப்பாவிடம் சொன்னேன். அவரை அறியாமல் அவர் கண்களிலிருந்து கண்ணீர் கரைபுரண்டோடியது. நான் அவர் அருகில் இல்லை இருப்பினும் அதை உணர்ந்தேன். நிச்சயம் பிறர் பார்த்து வியக்கும் உயரத்திற்கு சென்று என் தந்தையை பெருமைப் பட வைப்பேன் எனும் உறுதியோடு நிறைவு செய்கிறேன். மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல்

பிறப்பின் வலி

Image
நடந்து கொண்டிருக்கிறது பாலியல் பிரச்சினைகளுக்கெல்லாம் என்னுடைய தீர்வு என்னவென்றால் இனிமேல் ஒவ்வொரு பெண்ணின் பிரசவ அறைகளிலும் கணவன் அணுமதிக்கப் பட வேண்டும்.அந்தப் பெண் படுகின்ற வேதனை காட்சிப் படுத்தப் பட வேண்டும். தன்னுடைய மனைவி இவ்வளவு கஷ்டப்பட்டு தன் பிள்ளையைப் பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்த எந்த ஆணும் வேறொரு பெண்ணின் வாழ்வை சிதைக்க மாட்டான். தன்னுடைய தாய் இவ்வளவு வேதனைகளைத் தாங்கி தன்னை பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்த எந்த பிள்ளையும் வேறொரு பெண்ணின் வாழ்வை சிதைக்க மாட்டான். வெஎளிநாடுகளில் இருக்கிற மருத்துவமனைகளிலெல்லாம் கணவர்கள் அணுமதிக்கப் படுகிறார்கள். தமிழகத்திலும் இதை அமுல்படுத்தினால் பாலியல் பிரச்சனைகள் குறையும்.

அம்பறாத்தூணி

இன்றைய இளைய சமுதாயத்தை அதிகம் கவர்ந்த பாட்டு இது. பாக்காத நேரத்தில் பாக்குறதும். குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் எனத் தொடங்கும் பாடல்.என் நட்பு வட்டத்தில் அதிகம் நிலைப்பாட்டில் வைக்கப்பட்ட பாட்டு இது. சரி முழுமையாகத்தான் கேட்டுப் பார்ப்போமே என கேட்டேன்.இடையில் இருந்த நான்கு வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.அவை யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயர் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. இவை தான் என்னை கவர்ந்த அந்த வரிகள். சமீபத்தில் நூலகத்தில் நாஞ்சில் நாடன் அவர்களின் கம்பனின் அம்பறாத்தூணி எனும் நூலை எடுத்தேன். திடீரென ஒரு பக்கத்தில் மேற்கண்ட பாடல் வரிகள் இடம் பெற்றிருந்தன. எனக்கோ அது ஆச்சர்யத்தின் உச்சம். அதை படிக்கும் போது தான் தெரிந்தது அது ஒரு குறுந்தொகை பாடல் என்று. இது நம் சங்க இலக்கியத்தில் இருக்கும் பாடல் என்று தெரிந்ததும் மனதிற்குள் ஒரு பூரிப்பு. தவறாது இனிமேல் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் படிப்போம். நம் தமிழில் இல்லாத கருத்துக்கள் இல்லை என்பதை ஏற்போம். நன்றி: இந்த பாடலை இயற்றியவருக்கு.