அகத்தாய்வு செய்வோம்...



நேற்று ஒரு ஆங்கில புத்தகம் ( யூ வில் வின் ) படிக்கும் போது ஒரு கதை படித்தேன் அதிலிருந்து நான் என்ன கற்றுக் கொண்டேன என்பது குறித்த பதிவே இது...

ஒரு பலூன் வியாபாரி அழகழகான பலூன்களை விற்றுக் கொண்டிருக்கிறார்.
அவருடைய வியாபாரம் தொய்வு ஏற்படும் போதெல்லாம் அந்த பலூன்களில் ஹுலியம் வாயுவை நிரப்பி பறக்க விடுவார்.
அது பறக்கிறதைப் பார்த்து நிறைய பேர் அதை வாங்கிக் கொள்ள ஓடி வருவார்கள்.
பச்சை நீலம் ஊதா சிவப்பு ஆரஞ்சு என பல நிறங்களில் அந்த பலூன் இருக்கும்.
ஒரு சமயம் ஒரு சிறுவன் அந்த பலூன் வியாபாரியிடம் நின்று கொண்டு " கருப்பு நிற பலூனைப் பறக்க விட்டால் அதுவும் பறக்குமா " என்று கேட்டான்.
அதற்கு அந்த பலூன் வியாபாரி வெளியே இருக்கின்ற நிறத்தால் அந்த பலூன் பறக்கவில்லை அதற்கு உள்ளே இருக்கின்ற ஒரு வாயுவால் தான் அது பறக்கிறது என்று கூறினார்.

ஆம். நமக்குள்ளே ஆயிரமாயிரம் ஆற்றல்கள் கொட்டி கிடக்கின்றன்.
அகத்தாய்வு செய்யாமல் புறத்தாய்வு மட்டும் செய்து கொண்டிருக்கிறோம்.
வெளித் தோற்றம் சில வருடங்களுக்குப் பிறகு இல்லாமல் போய்விடும்.
ஆனால் நம்முடைய அகத்தில் இருக்கின்ற பண்புகள் நாம் இந்த மண்ணில் இல்லாத போது கூட நம்மைப் பற்றி பேச வைக்கும்.

அகத்தாய்வு செய்வோம்.
நம்மைப் பற்றி ஆழமாய் அறிவோம்.
ஆற்றல்களை வெளியே கொண்டு வருவோம்.
சராசரி மனப்பான்மை கடந்து சாதனைகள் புரிவோம்.

Comments

Popular posts from this blog

எழுத்தாணி பிடித்து இலக்கியத்தை நிமிர்த்திய பெண்கள்

கிராமம் அது சொர்க்கம்...

தந்தை அதிகாரம்