ஆறிலிருந்து அறுபது வரை



நாம் சின்ன பிள்ளைகளாய் குழந்தைகளாய் இருக்கும் போது நம்முடைய தாத்தா பாட்டி அம்மா அப்பா அத்தை மாமா என எல்லா உறவுகளும் நாம் நடப்பதை அவ்வளவு பொறுமையாய் வேடிக்கை பார்ப்பார்கள்.
நாம் மெல்ல மெல்ல நடப்போம்.
எத்தனை வேலை இருந்தாலும் அதை விட்டு விட்டு நம்மை கவனிப்பார்கள்.

ஆனால் ஒரு இருபது வருடங்கள் கழித்து பாருங்களேன்.
நாம் வளர்ந்திருப்போம்.
அவர்களுக்கெல்லாம் வயதாகியிருக்கும்‌.
நாம் குழந்தைகளாய் இருக்கும் போது தத்தி தத்தி நடந்ததை பொறுமையாய் வேடிக்கை பார்த்த அவர்கள் வயதான பிறகு மெதுவாய் நடப்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை

அவர்களை திட்டுகிறோம்.
இல்லையென்றால் அவர்களை விட்டு விட்டு வந்து விடுகிறொம்.
ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்களேன்.
நாம் சின்ன பிள்ளைகளாய் இருக்கும் போது அவர்கள் அப்படி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.
யோசித்துப் பாருங்களேன்.
இனியாவது அவர்களை அன்பாய் பார்த்துக் கொள்வோம்.
ஆதரவாய் அவர்களோடு கைகோர்த்து நடப்போம்.

Comments

Popular posts from this blog

எழுத்தாணி பிடித்து இலக்கியத்தை நிமிர்த்திய பெண்கள்

கிராமம் அது சொர்க்கம்...

தந்தை அதிகாரம்