Posts

மகளிர் முன்னேற்றம்

இதிகாசங்கள் புராணங்கள் என அனைத்தும் பெண்களை அடிமைப் படுத்தியிருக்கிறது. அதற்கான சான்று. சூதில் பணயமாக தன்னை வைத்த தருமனைப் பாஞ்சாலி மன்னித்தாள். நடுக்காட்டில் நள்ளிரவில் விட்டு விட்டு ஓடிய நளனைத் தமயந்தி மன்னித்தாள். நெருப்பு குளியல் நடத்த சொன்ன ராமனின் சிறுமையை சீதை மன்னித்தாள். மாதவியிடம் மையலுற்று கைப் பொருளை இழந்து வந்த கோவலனைக் கண்ணகி மன்னித்தாள். ஆனால். இந்திரனிடம் தன்னை இழந்த அகலிகையை மன்னிக்க மனமில்லாமல் கௌதம முனிவன் கல்லாக்கினான். ரேணுகையை மன்னிக்காத ஜமதக்னி மகன் பரசுராமனை அழைத்து தாயின் தலையைத் துண்டிக்க செய்தார். ஏங்கிய பெண்களின் கைகள் எல்லாம் இன்று ஓங்கி இருக்கிறது. அறிவியல் முதல் ஆன்மீகம் வரை பொறியல் முதல் பொறியியல் வரை அனைத்திலும் பெண்கள் சாதிக்கிறார்கள்... பேச்சுரிமை எழுத்துரிமை என அனைத்தும் ஒரு காலத்தில் மறுக்கப்பட்டது. ஆனால் இன்று பெண்கள் பாரதி கண்ட புதுமைப்பெண்களாகவும். பெரியார் கண்ட புரட்சிப் பெண்களாகவும் எல்லோரும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இது எம்முடைய கல்லூரியின் 1000 வது வலைப்பதிவு. பெண்களுக்கு இன்று எல்லா உரிமைகளும் கிடைத்த...

ஊழலின் தொடக்கம்

நாம் எல்லோரும் கோடி கோடியாய் பணம் பரிமாறுவதைத் தான் ஊழல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான ஊழல் என்பது எதிலிருந்து தொடங்குகிறது தெரியுமா. மளிகை கடைக்காரரிடம் ஒரு ரூபாய் சில்லரைக்கு பதிலாய் மிட்டாயை வாங்குகிறோம் அல்லவா அங்கு தான் ஊழலுக்கு தொடக்கப் புள்ளி வைக்கப்படுகிறது. இனிமேல் சில்லரைக்கு பதிலாய் மிட்டாய்களை வாங்காமல் அந்த சில்லரைகளை சேர்த்து வைத்து பேனா வாங்கி நாளைய பாரதத்தின் தலையெழுத்தை மாற்றுவோம்.
Image
கல்லூரிச் சுற்றுலாவிற்காக ஊட்டி சென்றிருந்தோம். எல்லா இடங்களையும் பார்வையிட்டு விட்டு இல்லூரியை நோக்கி புறப்பட்டோம். எனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் உனக்கு அக்கா யாரும் இருக்கிறார்களா மா என எங்களை வழிநடத்திச் சென்ற வழிகாட்டி கேட்டார். அதற்கு அவள் இல்லை என பதில் கூறினாள். அவர் அவருடைய அலைபேசியில் இருந்து ஒரு புகைப்படத்தை காட்டி இந்த பெண் போலவே அந்த பெண்ணும் இருந்ததால் தான் கேட்டேன் என்று புகைப்படத்தைக் காட்டினார். இந்த பெண்ணைப் போல இங்கு யாரையோ பார்த்தேன் அதனால் தான் கேட்டேன் என்று சொல்லி திரும்பி பார்த்தார். உடனே எங்கள் வகுப்புப் பொறுப்பாசிரியர் இவுங்க எல்லாரும் என் புள்ளைங்க. என் அணுமதி இல்லாமல் யாரையும் நீங்க திரும்பி  கூட பார்க்க கூடாது அவர்கள் அனைவரையும் அவர்கள் பெற்றோர்கள் என்னை நம்பி அணுப்பி வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் தான் பொறுப்பு என்று சொல்லி அவரிடம் பேசினார். அவர் இவுங்க எல்லாரும் என் பிள்ளைங்க என்று சொல்லும் போதே எங்கள் மாணவிகளின் மனதில் மகிழ்ச்சி உச்சத்திற்கு சென்றது. இது ஒரு சிறிய சம்பவமாக இருந்தாலும் அவர் மேல் இருந்த மரியாதை மே...

பழைய பஞ்சாங்கம்

செவ்வாய் கோளுக்கும் சென்று வாழ முடியுமா என்பதை பார்த்து விட்டு வந்து விட்டோம். ஆனால் இன்னும் செவ்வாய் தோஷம் எனும் பெயரில் பழைய பஞ்சாங்கத்துக்கு அடிமையாயிருக்கிறோம்.

ஆறிலிருந்து அறுபது வரை

Image
நாம் சின்ன பிள்ளைகளாய் குழந்தைகளாய் இருக்கும் போது நம்முடைய தாத்தா பாட்டி அம்மா அப்பா அத்தை மாமா என எல்லா உறவுகளும் நாம் நடப்பதை அவ்வளவு பொறுமையாய் வேடிக்கை பார்ப்பார்கள். நாம் மெல்ல மெல்ல நடப்போம். எத்தனை வேலை இருந்தாலும் அதை விட்டு விட்டு நம்மை கவனிப்பார்கள். ஆனால் ஒரு இருபது வருடங்கள் கழித்து பாருங்களேன். நாம் வளர்ந்திருப்போம். அவர்களுக்கெல்லாம் வயதாகியிருக்கும்‌. நாம் குழந்தைகளாய் இருக்கும் போது தத்தி தத்தி நடந்ததை பொறுமையாய் வேடிக்கை பார்த்த அவர்கள் வயதான பிறகு மெதுவாய் நடப்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை அவர்களை திட்டுகிறோம். இல்லையென்றால் அவர்களை விட்டு விட்டு வந்து விடுகிறொம். ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்களேன். நாம் சின்ன பிள்ளைகளாய் இருக்கும் போது அவர்கள் அப்படி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். யோசித்துப் பாருங்களேன். இனியாவது அவர்களை அன்பாய் பார்த்துக் கொள்வோம். ஆதரவாய் அவர்களோடு கைகோர்த்து நடப்போம்.

சாதிகள் வேண்டாம்

இந்த சமூதாயம் சலவைத் தொழிலாளியின் உழைப்பை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அந்த சலவைத் தொழிலாளியை ஏற்றுக் கொள்வதில்லை. இந்த சமுதாயம் முடிவெட்டுபவரினுடைய உழைப்பை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் முடிவெட்டுபவரை ஏற்றுக் கொள்வதில்லை. இப்படித்தான் ஒவ்வொரு சாதியை சார்ந்தவர்களின் உழைப்பை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு மனிதர்களை ஒதுக்கி வைக்கிற கேடு கெட்ட சமுதாயம் இது. சாதியின் பெயரால் எத்தனை காதல்கள் முளைக்கையிலே கிள்ளியெறியப் படுகிறது. வேறு சாதியை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் கொலை செய்து விட்டு அதற்கும் பெயர் வைக்கிறார்கள் ஆணவக்கொலை என்று. இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் படைத்தவர் பிரம்மன் என்றால் பிரம்மனின் சாதி தானே நாம் அனைவரும். இந்த உலகம் ஆதாம் ஏவாலின் வழி தோன்றியது என்றால் நாம் அனைவரும் ஆதாம் ஏவாலின் சாதி தானே. எங்கிருந்து வந்தது இத்தனை சாதிகள்... ராவணனின் ஆட்சியில் கூட மக்கள் ஓரளவு சமமாய் நடத்தப்பட்டனர். ராமனின் ஆட்சியே தொழில் அடிப்படையில் மக்களை பிரித்தனர். அன்று தொழில் சாதியாய் மாறியது. இன்று சாதி தொழிலாய் மாறியிருக்கிறது. சாதிகள் இல்லையடி பாப்பா என...

குழவியின் ஏக்கம்

Image
பண்டிகை நாட்களில் எல்லாம் குழந்தைகள் குற்றவாளிகளாக மாற ஆசை படுகிறார்கள். அப்போதாவது தனது தந்தை தன்னுடன் இருப்பார் எனும் நம்பிக்கையில். தந்தை காவலர்களாய்  இருப்பதால்.

கிராமம் அது சொர்க்கம்...

Image
எங்களின் கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகானது... சேவல் கூவும் சத்தத்தில் தான் அந்த நாளின் யுத்தம் தொடங்கும்... எட்டாத வேப்ப மரத்தை எட்டிப் பிடித்து.. வேப்பங்குச்சி ஒடித்து பல் விலக்கும் காட்சி... காலையிலே அப்பாவுக்காய் அம்மா ஆசையோடு போடும் நாட்டுச் சக்கரை டீ.. மாட்டுச் சாணம் அள்ளுவதில் இருக்கும் மனமகிழ்வு... தண்ணீர் கலக்காத சத்தான பாலை மக்களுக்கு தரும் மாண்பு... லாபமென்றாலும் செயற்கை உரமெனும் விஷத்தை தாயின் மடியிலே தெளிக்க மாட்டேன் எனும் விவசாயி.‌. சந்தைக்கு போகும் அவசியமில்லை.. காய்கறிகளெல்லாம் எங்கள் தோட்டத்தில் விளைவதனால்... மருத்துவர் தேவையில்லை ஏனென்றால் பாட்டிகள் எங்களுடன் இருக்கிறார்கள்... சத்து மாத்திரைகள் தேவையில்லை. அதைவிட சத்தான கீரைகள் எங்கள் மண்ணிலே விளைகின்றன... ஆரோ தண்ணீரை விட ஆரோக்கியமான தண்ணி எங்கள் ஆற்றுத் தண்ணீர்...  அனைத்து உணவும் பிறருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதால் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு வேலை இல்லை... வீட்டைச் சுற்றியும் மரங்கள் இருப்பதால் நாங்கள் மறந்து கூட ஏசியை ஓசியில் தந்தாலும் வாங்குவதில்லை..‌.  அண்டை வீட்டாரிடம...

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

Image
நாம் ஒரு செயலிலோ அல்லது போட்டியிலோ வெற்றி பெற்று விட்டோம் என்றால் அந்த வெற்றிக்கு நான் இப்படி பன்னேன் அதனால் ஜெயிச்சுட்டேன். நான் அப்படி பன்னேன் அதனால் ஜெயிச்சுட்டேன் என்று அந்த வெற்றிக்கு நாம் தான் காரணம் என மார்தட்டி பெருமைப் படுகிறோம்... இதுவே தோல்வியைத் தழுவி விட்டோம் என்றால் அதனால் தான் நான் ஜெயிக்கல இதனால் தான் நான் ஜெயிக்கல அவுங்க இப்படி பன்னிட்டாங்க இவுங்க இப்படி பன்னிட்டாங்க என அந்த தோல்விக்கு காரணமாய் பிறரைக் காட்டுகிறோம்... அது எப்படி நம் வெற்றிக்கு நாம் காரணமாய் இருக்கும் போது நம்முடைய தோல்விக்கு மட்டும் பிறர் காரணமாய் இருப்பார்கள்..... தீதும் நன்றும் பிறர் தர வாரா...

நா காக்க

Image
சில நேரங்களில் நாம் நம்மை அறியாமல் செய்த சின்னஞ்சிறு செயல்கள் கூட பிறரை மிகவும் காயப் படுத்தும்... விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளுக்கு இடையில் சண்டை வந்துவிட்டது... அந்த சண்டையின் உச்சகட்டமாக ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடம்.. நான் தான் நம்ம அம்மா அப்பா பெற்ற பிள்ளை நீ தத்துப் பிள்ளை என்கிறது... இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த குழந்தை வேதனைப் படவும் இல்லை.. வருத்தப்படவும் இல்லை... பெருமிதத்தோடு சொல்கிறது.. பெத்த பிள்ளைக்கும் தத்துப் பிள்ளைக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா.... பெற்ற பிள்ளை என்றால் கருப்பையில் வளர்ந்தவர்கள்.. தத்துப் பிள்ளை என்றால் இதயத்தில் வளர்ந்தவர்கள்.. என்று கூறியது... அந்த குழந்தை இந்த வார்த்தைகளை மனதார சொல்லியிருந்தாலும் கூட அந்த மழலையின் அடிமனதில் அது கடினத் தன்மையையும் ஏக்கத்தையும் அல்லவா ஏற்படுத்தியிருக்கும்... பிறர் மனதை காயப்படுத்தாமல் பேசுபவர் யாரோ அவரே பிறரால் மதிக்கப் படுவார்கள். நேசிக்கப் படுவார்கள்... நா காக்க...

அன்புள்ள ஆசானுக்கு

Image
ஆசிரியர் தின விழாவிலே எங்கள் கல்லூரி முதல்வருக்காய் நான் எழுதி அவர் முன் அரங்கேற்றம் செய்த என் கவிதை...  கமல்ஹாசனுக்கு அடுத்து பல முறை தசாவதாரம் எடுத்தவர் நீங்கள் தான்‌... தாய் தந்தைக்கு மகனாய்... மனைவிக்கு ஏற்ற கணவராய்... மகனுக்கும் எங்களைப் போன்ற மகள்களுக்கும் தந்தையாய்... ஆசிரியர்களுக்கெல்லாம் நண்பணாய்... ஆசிரியைகளுக்கெல்லாம் அண்ணணாய்... தாளாளருக்கு தனயனாய்... துணைத் தாளாளருக்கு தளபதியாய்... புத்தகங்கள் எழுதிட்ட எழுத்தாளராய்... கவி புனையும் கவிஞராய்..கலைஞராய்... திரையில் நடிக்க தெரிந்த நடிகராய்... மலரினும் மெல்லிய இதயம் படைத்திட்ட நல் இதயங்களே எனத் தொடங்கி பேச்சால் கட்டிப் போடும் பேச்சாளராய்... பல அவதாரம் எடுத்திட்டவரே... அவதாரங்கள் தொடரட்டும்... அன்பு பெருகட்டும்... ஆயுள் நீளட்டும்... பல்லாண்டுகள் தொடரட்டும் உங்கள் அறியாமை இருளகற்றும் பணி. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஐயா....

உளறல்களுக்கு பேச்சு வடிவம் கிடைத்த மேடை

Image
எங்க அம்மாவுக்கும் எனக்கும் உள்ள உறவு தொப்புள்கொடி உறவு திருப்பூர் குமரனுக்கும் இந்த தேசத்துக்கும் உள்ள உறவு தேசியக்கொடி உறவு. கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவு தாலிக்கொடி உறவு. இந்த மாதிரி எந்த ஒரு இணைப்பும் இல்லாமல் நண்பர்களிடையே மலர்ந்து மணம் வீசுகின்ற உறவு தான் நட்பு எனும் நேசக்கொடி உறவு. இந்த வரிகளை என் வாழ்வில் எந்நாளும் மறக்க மாட்டேன் . ஏனென்றால் முதன்முதலாய் தொலைக்காட்சி கேமாராவைப் பார்க்கிறேன். சந்தித்திராத கூட்டத்தை சந்திக்கிறேன். பெற்றோரை நீங்கள் பேசுவதைப் பார்க்க அழைத்து வாருங்கள் என்று சொல்லி கொடுக்கப்பட்ட சீட்டு இரண்டு கைப்பையிலே கண்ணுறங்குகிறது. எட்டாம் வகுப்பு பாப்பா என்ன பேசப் போகுது என பார்க்கும் பெருங்கூட்டம். பேச்சாளர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் ஒருஙங்கிணைப்பாளர் வாசிக்க என் பெயரை மட்டும் காணவில்லை. அழுகை கலந்த பயம். எல்லா பெயரும் சொல்லி முடித்த பிறகு மேடையில் இருக்கின்ற பேச்சாளர்களின் பெயரையெல்லாம் சொல்லிவிட்டேன். இந்த மேடையில் ஒரு  கத்தி அமர்ந்திக்கிறது என்று சொல்லி என்னை அறிமுகம் செய்தார். இப்படியெல்லாம் சொல்லுகிறாரே திக்காமல் ஒழுங்கா...

அகத்தாய்வு செய்வோம்...

Image
நேற்று ஒரு ஆங்கில புத்தகம் ( யூ வில் வின் ) படிக்கும் போது ஒரு கதை படித்தேன் அதிலிருந்து நான் என்ன கற்றுக் கொண்டேன என்பது குறித்த பதிவே இது... ஒரு பலூன் வியாபாரி அழகழகான பலூன்களை விற்றுக் கொண்டிருக்கிறார். அவருடைய வியாபாரம் தொய்வு ஏற்படும் போதெல்லாம் அந்த பலூன்களில் ஹுலியம் வாயுவை நிரப்பி பறக்க விடுவார். அது பறக்கிறதைப் பார்த்து நிறைய பேர் அதை வாங்கிக் கொள்ள ஓடி வருவார்கள். பச்சை நீலம் ஊதா சிவப்பு ஆரஞ்சு என பல நிறங்களில் அந்த பலூன் இருக்கும். ஒரு சமயம் ஒரு சிறுவன் அந்த பலூன் வியாபாரியிடம் நின்று கொண்டு " கருப்பு நிற பலூனைப் பறக்க விட்டால் அதுவும் பறக்குமா " என்று கேட்டான். அதற்கு அந்த பலூன் வியாபாரி வெளியே இருக்கின்ற நிறத்தால் அந்த பலூன் பறக்கவில்லை அதற்கு உள்ளே இருக்கின்ற ஒரு வாயுவால் தான் அது பறக்கிறது என்று கூறினார். ஆம். நமக்குள்ளே ஆயிரமாயிரம் ஆற்றல்கள் கொட்டி கிடக்கின்றன். அகத்தாய்வு செய்யாமல் புறத்தாய்வு மட்டும் செய்து கொண்டிருக்கிறோம். வெளித் தோற்றம் சில வருடங்களுக்குப் பிறகு இல்லாமல் போய்விடும். ஆனால் நம்முடைய அகத்தில் இருக்கின்ற பண்புகள் நாம் இந்த மண...

மனமே மாறிவிடு

Image
ஒரு சில ரகசியங்களை நாம் நமக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்வோம். சில சமயங்கள் அந்த ரகசியங்களெல்லாம் வேறு யாருக்காவது தெரிந்து விட்டது என்றால் கோபம் கொள்வோம். அது நியாயமா??? ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். நம்முடைய ரகசியங்களை நம்மாலேயே பாதுகாக்க முடியவில்லை அதனால் தான் பகிர்ந்து கொள்கிறோம். நம்மால் பாதுகாக்க முடியாத நம்முடைய ரகசியங்களை மற்றவர்கள் பாதுகாப்பார்கள் என நம்புவது எப்படி நியாயம்.......????

எழுத்தாணி பிடித்து இலக்கியத்தை நிமிர்த்திய பெண்கள்

Image
சென்ற ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றதற்காக கல்லூரியின் தாளாளரிடம் வாழ்த்துப் பெற சென்றிருந்தேன். அந்த சமயத்தில் எங்கள் தமிழ்த் துறைத் தலைவர் குணசீலன் ஐயாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஐயா என்ன தலைப்பு குடுத்தாங்க எந்த கருத்த மூலமா வைச்சு பேசுனீங்க என்று கேட்டார். நான் ‌"ஔவைப் பாட்டியின பாட்டே பண்பாடு" எனும் தலைப்பில் அவரின் பாடல் வரிகளை சொல்லி நிகழ்கால உதாரணத்தை சொல்லி பேசினேன் ஐயா என்று சொன்னேன். ஐயா : எந்த ஔவையாரைப் பற்றி பேசினீர்கள்? நான் : எந்த ஔவையாரா! எனக்கு தெரிந்தது ஒரே ஒரு ஔவையார் தான் ஐயா. ஐயா : இல்லை பா. இலக்கியத்தையும் வரலாற்றையும் நன்றாக படித்து பாருங்கள். நான்கு ஔவையார் இருக்கிறார்கள்... நீண்ட நாட்கள் கழித்து நினைவுகளை அசை போடும் போது தான் ஒரு கருத்து தோன்றியது. ஆரம்ப பள்ளியில் ஆரம்ப பாடமாக ஆத்திச்சூடி தந்திருக்கிறார்கள்.அதை எழுதியவர் குறித்த முழுமையான பார்வையும் புரிதலுமே நமக்கு இல்லையே. இன்னும் எத்தனையோ தகவல்கள் நம்மை சுற்றியும் இருக்கின்றன. அதைத் தேடி கண்டுபிடிக்க வேண்டியது ...

நட்பு அன்றும் இன்றும்

Image
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. என்கிறார் வான்மறை தந்த வள்ளுவர். உண்மையான நட்பு என்பது தனது நன்பனுக்கு ஆபத்து வருகின்ற தக்க காலத்தில் உதவுவதாக இருக்க வேண்டும். புறநானூறிலே "தன் தோழற்கு வருமே" எனும் ஒரு பாடலில் ஒரூஉத்தனார் நட்பை அழகாய் ஆழமாய் கூறியிருக்கிறார். அந்த பாடல் வரிகள். கோட்டம் கண்ணியும் கொடுந்திரை அடையும்- வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்- ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய- திணிநிலை அலறக் கூவை போழ்ந்து தன்- வடிமான் எகம் கடிமுகத்து ஏந்தி- ஓம்புமின் ஓம்புமின் இவண்! என ஓம்பாது- தொடர்கோள் யானையின் குடர்கால் தட்பக்- கன்றுஅமர் கறவை மான; முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே. இந்த பாடலின் பொருள் எனது பார்வையில். அழகான கண்ணியும்  மென்மையான ஆடையும் மன்னனின் பெருமையைப் பாடிப்பாடி அவனை கவருதலும் அவனுக்கு ஏற்புடையது அல்ல. போரிலே தன்னுடைய நண்பன் பகைவர்களால் சூழப்பட்டிருக்கும் சமயத்திலே போர்வாளினை ஏந்திக் கொண்டு முன்னே நண்பனை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிற பகைவர்களையெல்லும் அழித்துக் கொண்டே இவன் முன்னோக்கி செல்கின்றான். சுற்றி நிற்...

அன்புள்ள அப்பா

Image
சமீபத்தில் என் அப்பாவிடம் ஏன் அப்பா இவ்ளோ கஷ்டப்பட்டும் என்ன படிக்க வைக்குறீங்க என்று கேட்டேன். அதற்கு அவர் நான் தான் வானத்த அன்னாந்து பாத்து பாத்்து விவசாயம் செஞ்சு செஞ்சு ஏமாந்து போய்டேன். ஆனா நான் பெத்த புள்ளையும் பையனும் மத்தவங்க அன்னாந்து பாக்குற அளவுக்கு உயரனும். அதா சாமி படிக்க வைக்குறேன் என்று சொன்னார். இது பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்தது. அப்துல் கலாம் ஐயாவின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற பட்டிமன்றத்தில் இந்த கருத்தை பதிவு செய்தேன். இதை இன்று என் அப்பாவிடம் சொன்னேன். அவரை அறியாமல் அவர் கண்களிலிருந்து கண்ணீர் கரைபுரண்டோடியது. நான் அவர் அருகில் இல்லை இருப்பினும் அதை உணர்ந்தேன். நிச்சயம் பிறர் பார்த்து வியக்கும் உயரத்திற்கு சென்று என் தந்தையை பெருமைப் பட வைப்பேன் எனும் உறுதியோடு நிறைவு செய்கிறேன். மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல்

பிறப்பின் வலி

Image
நடந்து கொண்டிருக்கிறது பாலியல் பிரச்சினைகளுக்கெல்லாம் என்னுடைய தீர்வு என்னவென்றால் இனிமேல் ஒவ்வொரு பெண்ணின் பிரசவ அறைகளிலும் கணவன் அணுமதிக்கப் பட வேண்டும்.அந்தப் பெண் படுகின்ற வேதனை காட்சிப் படுத்தப் பட வேண்டும். தன்னுடைய மனைவி இவ்வளவு கஷ்டப்பட்டு தன் பிள்ளையைப் பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்த எந்த ஆணும் வேறொரு பெண்ணின் வாழ்வை சிதைக்க மாட்டான். தன்னுடைய தாய் இவ்வளவு வேதனைகளைத் தாங்கி தன்னை பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்த எந்த பிள்ளையும் வேறொரு பெண்ணின் வாழ்வை சிதைக்க மாட்டான். வெஎளிநாடுகளில் இருக்கிற மருத்துவமனைகளிலெல்லாம் கணவர்கள் அணுமதிக்கப் படுகிறார்கள். தமிழகத்திலும் இதை அமுல்படுத்தினால் பாலியல் பிரச்சனைகள் குறையும்.

அம்பறாத்தூணி

இன்றைய இளைய சமுதாயத்தை அதிகம் கவர்ந்த பாட்டு இது. பாக்காத நேரத்தில் பாக்குறதும். குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் எனத் தொடங்கும் பாடல்.என் நட்பு வட்டத்தில் அதிகம் நிலைப்பாட்டில் வைக்கப்பட்ட பாட்டு இது. சரி முழுமையாகத்தான் கேட்டுப் பார்ப்போமே என கேட்டேன்.இடையில் இருந்த நான்கு வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.அவை யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயர் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. இவை தான் என்னை கவர்ந்த அந்த வரிகள். சமீபத்தில் நூலகத்தில் நாஞ்சில் நாடன் அவர்களின் கம்பனின் அம்பறாத்தூணி எனும் நூலை எடுத்தேன். திடீரென ஒரு பக்கத்தில் மேற்கண்ட பாடல் வரிகள் இடம் பெற்றிருந்தன. எனக்கோ அது ஆச்சர்யத்தின் உச்சம். அதை படிக்கும் போது தான் தெரிந்தது அது ஒரு குறுந்தொகை பாடல் என்று. இது நம் சங்க இலக்கியத்தில் இருக்கும் பாடல் என்று தெரிந்ததும் மனதிற்குள் ஒரு பூரிப்பு. தவறாது இனிமேல் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் படிப்போம். நம் தமிழில் இல்லாத கருத்துக்கள் இல்லை என்பதை ஏற்போம். நன்றி: இந்த பாடலை இயற்றியவருக்கு....

தந்தை அதிகாரம்

Image
18 வருடங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்ப்பதற்காய் அந்த குழந்தையின் உறவினர்களெல்லாம் வந்திருந்தார்கள். ஆனால் அந்த குழந்தையின் தந்தை மட்டும் வரவில்லை. எல்லா வாய்களும் பேசுகின்றன பொன்னு பொறந்துட்டா அதனால தான் பாக்க வரலனு. அடுத்த நாள் அந்த தந்தை மழையிலே உழவோட்டிக் கொண்டிருக்கிறார். போய்‌ குழந்தையை பாத்துட்டு வா பா பொன்டாட்டி பொக்குனு போயிருவா பின்னாடி புள்ள ஏங்கி போய்டும் னு சொன்னதுக்கு அந்த அப்பா சொல்கிறார். ஒரு விவசாயிக்கு தன்னுடைய குடும்பம்‌ குழந்தை சொந்தம் பந்தம் இவையெல்லாம் எவ்வளவு முக்கியமோ அதைவிட அவனுக்கு சோறு போடுற நிலம் முக்கியம்ங்க. மண்ண நேசிக்கிற நான் என் பொண்ண நேசிக்காம போய்ருவேனா. விதைக்கிற நேரத்துல விதைச்சா தான விளைஞ்ச என் பயிர (குழந்தைய) சந்தோசமா பாத்துக்க முடியும் என்று கூறிய அந்த தந்தை உண்மையிலே போற்றுதலுக்குரியவர் தான். தந்தை அதிகாரம் தொடரும்....