அன்புள்ள அப்பா

சமீபத்தில் என் அப்பாவிடம் ஏன் அப்பா இவ்ளோ கஷ்டப்பட்டும் என்ன படிக்க வைக்குறீங்க என்று கேட்டேன்.
அதற்கு அவர் நான் தான் வானத்த அன்னாந்து பாத்து பாத்்து விவசாயம் செஞ்சு செஞ்சு ஏமாந்து போய்டேன்.
ஆனா நான் பெத்த புள்ளையும் பையனும் மத்தவங்க அன்னாந்து பாக்குற அளவுக்கு உயரனும்.
அதா சாமி படிக்க வைக்குறேன் என்று சொன்னார்.
இது பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்தது.
அப்துல் கலாம் ஐயாவின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற பட்டிமன்றத்தில் இந்த கருத்தை பதிவு செய்தேன்.
இதை இன்று என் அப்பாவிடம் சொன்னேன்.
அவரை அறியாமல் அவர் கண்களிலிருந்து கண்ணீர் கரைபுரண்டோடியது.
நான் அவர் அருகில் இல்லை இருப்பினும் அதை உணர்ந்தேன்.
நிச்சயம் பிறர் பார்த்து வியக்கும் உயரத்திற்கு சென்று என் தந்தையை பெருமைப் பட வைப்பேன் எனும் உறுதியோடு நிறைவு செய்கிறேன்.

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்

Comments

  1. நிச்சயமாக காவியா, வள்ளுவர் இருந்திருந்தால் மகன் என்று மட்டுல்ல மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி என்றோ... மகளுக்கென ஒரு அதிகாரமோ எழுதியிருப்பார்..

    ஏவா மக்கண் மூவா மருந்து
    ஏவா மக்கள் மூவா மருந்து என்பாரே தமிழ் மூதாட்டி ஔவை..

    பெற்றோர்கள் கட்டளை யிடுவதற்குமுன் குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகள் அவர்களுக்குத் தேவாமிர்தத்தைப் போன்றவர்கள்..

    தங்கள் பெற்றோர் தங்களைப் பெற்றமைக்காக ஒரு நாள் அல்ல ஒவ்வொரு நாளும் பெருமிதம் கொள்வர்..

    ஊக்கம் அது கை விடேல்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் எழுத்துக்கள் மேலும் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
      மிக்க நன்றி ஐயா.

      Delete

Post a Comment

Popular posts from this blog

எழுத்தாணி பிடித்து இலக்கியத்தை நிமிர்த்திய பெண்கள்

கிராமம் அது சொர்க்கம்...

தந்தை அதிகாரம்